கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

நம்பிக்கை மட்டுமே எனக்கு துணை - கயாடு லோகர்

பல சூழலில் என் நம்பிக்கை மட்டுமே எனக்கு துணையாக நின்றுள்ளது என்று கயாடு லோகர் தெரிவித்துள்ளார்.

'டிராகன்' என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த நடிகை கயாடு லோகர், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அதர்வாவுடன் இணைந்து நடித்த 'இதயம் முரளி' படமும் 'ஹிட்' அடித்தது.

இதற்கிடையில் கயாடு லோகரிடம், 'உங்கள் பலம் எது, பலவீனம் எது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு கயாடு லோகர் பதிலளிக்கையில், "என் நம்பிக்கை தான் என் பலம். பல சூழலில் என் நம்பிக்கை மட்டுமே எனக்கு துணையாக நின்றுள்ளது. தோல்விகள் சூழ்ந்தாலும் அந்த நம்பிக்கையே என்னை கரை சேர்த்தது.

அதேவேளை நான் எளிதில் ஏமாந்து போவேன். அது என் பலவீனம். இந்த பலவீனத்தால் பல இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறேன். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கிடைத்து வருகிறது" என்றார்.

SCROLL FOR NEXT