சென்னை,
களவாணி படத்தில் நடித்து பேசப்பட்ட நடிகை ஓவியா, அதன்பிறகு பல படங்கள் நடித்தார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் ஒவியா நடிக்கும் புதிய தமிழ்ப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.ஆர்.பி. இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் சார்பில் ராஜா பிரபு தயாரிப்பில், சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்துக்கு 'கிளிக்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
இதில் ஒவியாவுடன், ராஜா பிரபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுந்தர் மஹாஸ்ரீ, அஸ்மிதா, அமுதவாணன், லொள்ளு சபா மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்துக்கு அருண்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோசப் சந்திரசேகர் இசையமைக்கிறார். இளமை துள்ளலான கதைக்களத்தில் சஸ்பென்ஸ் கலந்தும் படமாக்கி வருகிறோம். ஜென் சி கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் உருவாகும் இப்படம் உற்சாகம், உணர்ச்சிகளின் சங்கமமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.