சென்னை,
‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், "வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா" என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது.
இவர் தற்போது ‘பரிமளா & கோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.