சினிமா செய்திகள்

பவன் கல்யாண் நடிக்கும் “ஓஜி 2” படத்தின் அறிவிப்பு

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் ‘ஓஜி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் ‘ஓஜி 2’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஜி யுனிவர்ஸ் எனப் பெயரிடப்பட்ட இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடித்த ‘ஓஜி’ படம் கடந்த ஆண்டு வெளியானது, இந்த படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா இப்படத்தை தயாரித்திருந்தார்.

அதிரடி ஆக்சன் காட்சிகள், காட்சிகளை உருவாக்கிய விதம் என சில விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. தமன் இசையமைத்த பின்னணி இசை இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவின.

இந்த நிலையில், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் ‘ஓஜி 2’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஜி யுனிவர்ஸ் எனப் பெயரிடப்பட்ட இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பவன் கல்யாண் போர் பின்னணியில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.