சினிமா செய்திகள்

ராம் சரணின் ’பெத்தி’...முதல் பாடல் புரோமோ வெளியீடு

ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் ’பெத்தி’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

சென்னை,

ராம் சரணின் பெத்தி படத்திலிருந்து முதல் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு ராம் சரண் பெத்தி படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சிவ ராஜ்குமார், திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், பெத்தி படத்திலிருந்து முதல் பாடலான ஜிகிரி ஜிகிரி புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. முழு பாடல் வருகிற 7-ம் தேதி வெளியாகிறது.