சினிமா செய்திகள்

டிஎன் 2026 படத்திற்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் மனு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

நட்டி நட்ராஜ், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் இளவரசு நடிப்பில் வெளிவரப்போகும் டிஎன் 2026 திரைப்படத்தை தமிழக தேர்தல் முடியும் வரை தடை செய்ய வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்காத போது இந்த திரைப்படத்தை மட்டும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட எப்படி அனுமதி அளிக்கலாம் என்று மனுவில் கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசியல் குறிப்புகள் நிரம்பி, தற்போதைய தேர்தல் அரசியலை விமர்சிக்கும் டிஎன் 2026 திரைப்படத்திற்கு சிபிஎப்சி சான்றிதழ் வழங்கியிருப்பதை தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்பாக டிஎன் 2026 திரைப்படம் வெளியிடப்படுவது, வாக்காளர்களிடையே சார்புநிலை உருவாக்கி, சமமான போட்டி நிலையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT