‘பீட்சா’ திரைப்படத்தின் நான்காவது பாகம் விரைவில் திரைக்கு வரும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘பீட்சா 4’ திரைப்படத்தின் மோசன் போஸ்ட்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.
2012-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், கருணாகரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பீட்சா'. சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பீட்சா 2,3 பாகங்கள் வெளிவந்து சுமாரான வரவேற்பைப் பெற்றது.
‘பீட்சா’ திரைப்படத்தின் நான்காவது பாகத்தை சி.வி. குமார் எழுதி தயாரிக்கிறார். இவர், தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரீஷ் விஜய் இயக்கவுள்ள இத்திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் புகழ் பிரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சமூக வலைதள பிரபலம் ஹுசைன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.
‘பீட்சா’ திரைப்படத்தின் நான்காவது பாகம் விரைவில் திரைக்கு வரும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘பீட்சா 4’ திரைப்படத்தின் மோசன் போஸ்ட்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.
இதில் ஹீரோவாக நாசரின் மகன் அபி ஹாசன் நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு கடாரம் கொண்டான், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்தவர். இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெறவுள்ளது.