சென்னை,
சில கதைகளைச் சொல்லி முடித்த பிறகும், அவை நீண்ட காலத்திற்கு நம் மனத்திலேயே தங்கிவிடும். 'அக்கா' எப்போதும் எனக்கு அப்படியான ஒரு கதையாகவே இருக்கும். என நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடர் கடந்த அக்டோபர் 30ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இந்த தொடர், அதிகாரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1980-களில் தென்னிந்தியாவில் உள்ள பெர்னூர் என்ற கற்பனையான நகரத்தை மையமாகக் கொண்டு இத்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பெண்கள் குழுவைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களின் அதிகாரத்துக்கு வெளியிலிருந்து வரும் ஒருவரால் அச்சுறுத்தல் ஏற்படுவதும், அதனால் உருவாகும் மோதல்களும் திரில்லர் பாணியில் சொல்லப்படுகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே முதன்முறையாக இணைந்து நடித்து வெளியான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், அக்கா வெப் தொடரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சில கதைகளைச் சொல்லி முடித்த பிறகும், அவை நீண்ட காலத்திற்கு நம் மனத்திலேயே தங்கிவிடும். 'அக்கா' எப்போதும் எனக்கு அப்படியான ஒரு கதையாகவே இருக்கும். ஆதித்யா சோப்ராவுக்கு இதயம் கனிந்த நன்றி. இந்தத் தொடரை நம்பியதற்கு தயாரிப்பாளர்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் நன்றி.
பவானி என்ற கதாபாத்திற்கு என்னை நம்பியதுக்கு தர்மராஜ் ஷெட்டிக்கு நன்றி. இயக்குநர், ஒளிப்பதிவு குழுவினருக்கு என் எல்லையில்லா அன்பு. ராதிகா ஆப்தேவுடன் இணைந்து பவானி ருத்ராவுக்கு உயிர் கொடுத்தது மிகவும் சிறப்பாக இருந்தது. அக்கா கதாபாத்திரம் சிறப்பாக வர உதவிய அனைவருக்கும் நன்றி. இவர்கள் இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது. விகாஸ், சின்ஹாரோன் எனக்கு பவானியின் குரலைக் கண்டுபிடிக்க உதவினார்கள்.
மற்றும் பலர் திஅரைக்கு பின்னாடி அயராது உழைத்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் என் எல்லையில்லா அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அக்கா தொடரைப் பார்த்த அனைவருக்கும் எனது நன்றிகள். பவானி மற்றும் அவளது உலகத்தைப் பாராட்டியவர்களுக்கு மிக்க நன்றி" என்று தெரிவித்துள்ளார்.