சினிமா செய்திகள்

பக்கத்துவீட்டு மாடியில் இருந்து ரகசிய புகைப்படம்; 'எதற்கும் எல்லையுண்டு' - சாடிய நடிகை ஆலியா பட்

இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை ஆலியா பட்.

மும்பை,

இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை ஆலியா பட். இவரது கணவர் நடிகர் ரன்பீர் கபூர். ஆலியா பட்டிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

இதனிடையே, நடிகை ஆலியா பட் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவரை சிலர் ரகசியமாக புகைப்படம் எடுத்துள்ளனர். ஆலியா பட் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சிலர் அதிநவீன கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுத்துள்ளனர்.

நடிகைகளின் புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து அதை செய்தி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நபர்கள் ஆலியா அவரது வீட்டில் இருக்கும்போது அவருக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுத்துள்ளனர்.

வீட்டில் இருக்கும்போது தன்னை யாரோ கண்காணிப்பது போன்று உணர்ந்த நடிகை ஆலியா தன்னை சிலர் எதிரே உள்ள கட்டிடத்தில் இருந்து ரகசியமாக புகைப்படம் எடுபதை உணர்ந்துகொண்டார். இதையடுத்து, தன்னை ரகசியமாக புகைப்படம் எடுத்தவர்களுக்கு நடிகை ஆலியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆலியா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், என்ன விளையாடுகிறீர்களா? நான் வழக்கமான மதிய வேலையில் எனது வீட்டிற்குள் இருக்கும்போது என்னை யாரோ கவனிப்பது போன்று உணர்ந்தேன். நான் மேலே பார்த்தேன் அப்போது எனது எதிர் குடியிருப்பின் மாடியில் 2 பேர் கேமராக்களுடன் என்னை பார்ப்பதை நான் கண்டேன். எந்த உலகத்தில் இது சரி மற்றும் அனுமதிக்கப்பட்டது?

இது ஒரு தனிநபரின் தனியுரிமை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். எதற்கும் எல்லையுண்டு. அந்த எல்லையை நீங்கள் மீறக்கூடாது. அனைத்து எல்லைகளும் இன்று மீறப்பட்டுவிட்டது என்று கூறலாம்' என பதிவிட்டு மும்பை போலீசையும் அவர் டேக் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மும்பையின் ஹேர் பகுதி போலீசார் ஆலியா பட்டை தொடர்புகொண்டு இதுகுறித்து புகார் அளிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர். ஆனால், ஆலியா புகார் அளிக்கவில்லை. 

SCROLL FOR NEXT