சென்னை,
ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ (Peddi) படத்துடன், பூஜா ஹெக்டே - மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள இந்தி படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ (Hai Jawani Toh Ishq Hona Hai) படம் பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு தயாராகியுள்ளது.
டேவிட் தவான் இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் காமெடி படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாகூர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது.
மறுபுறம், புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் - ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ ஜூன் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு நாள் இடைவெளியில் வெளியாகும் இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பூஜா ஹெக்டே முன்னதாக ராம் சரணுடன் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதேபோல், மிருணாள் தாகூர் ‘பெத்தி’ படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு பரிசீலிக்கப்பட்டதாகவும், பின்னர் அதில் இணையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
‘பெத்தி’ பல மொழிகளில் வெளியாக இருப்பதால் தென்னிந்தியாவில் வலுவான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பூஜா ஹெக்டே - மிருணாள் தாக்கூர் நடித்துள்ள ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ இந்தி மார்க்கெட்டில் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.