சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டே பிறந்த நாள்: “ஸ்ரீ ஸ்ரீ” படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

ரவி நெலகுதிதி இயக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, முதல்முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டேவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்பட போஸ்டர் வெளியானது.

ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படப்பிடிப்பு நிறைவு

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு படக்குழுவினரும், நடிகர் துல்கர் சல்மானும் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

படத்தின் ரிலீஸ் அப்டேட்

இந்த நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு போஸ்டர் வெளியீடு

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT