சினிமா செய்திகள்

பள்ளி பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து வேதனைப்பட்ட பூஜிதா பொன்னாடா

நடிகை பூஜிதா, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் குறித்து பேசினார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான பூஜிதா பொன்னாடா, தமிழில் 'செவன்', 'ஜாலியோ ஜிம்கானா', 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்', 'படையாண்டா மாவீரா', 'யோகிடா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளத்தில் பிசியாக நடித்து வரும் பூஜிதா, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் குறித்து மனம் பகிர்ந்தார்.

அவர் கூறும்போது, "நான் 11-ம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் படிக்கும் பையன் என் செல்போன் நம்பரை கண்டுபிடித்து எனக்கு போன் செய்து பேசினான். இதை நான் என் தந்தையிடம் சொல்ல, அவர் என் செல்போனை ஆத்திரத்தில் தூக்கிப்போட்டு உடைத்துவிட்டார். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவே இல்லை. உண்மையை சொன்னது குற்றமா? என்று வேதனைப்பட்டு போனேன். இந்த சம்பவம் இன்னும் நீங்காமல் இருக்கிறது. இதை மறக்க துடிக்கிறேன்", என்றார்.