கன்னட சின்னத்திரை உலகின் முன் னணி நடிகையாக திகழ்ந்தவர் ராஷ்மி லீலா. 'பப்பா பண்டு'. 'தெலுங்கு ஜானகி”, 'கவலுதாரி', 'காவ்யாஞ்சலி', 'பந்தவ்யா', 'ஆனந்த சாகர்', 'ஹூக்லி பிட் சார்', 'கோதுலி', 'ககனா குசுமா' உள்ளிட்ட பல வெற்றி தொடர்களில் நடித்து பிரபலமானார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
கன்னட சின்னத்திரை உலகின் ராணி என்று வர்ணிக்கப்பட்ட ராஷ்மி லீலா, 2019-ம் ஆண்டு முதல் நுரையீரல் தழும் பேறல் நோயால் (பல்மோனரி பைப்ரோ சிஸ்) பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.
சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நலம் இன்னும் மோசமடைந்தது. இதையொட்டி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 38. ராஷ்மி லீலாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத் தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.