சினிமா செய்திகள்

வசூலில் மிரட்டும் பிரபாஸின் “ராஜா சாப்” திரைப்படம்

பிரபாஸின் ‘ராஜாசாப்’ படம் 3 நாட்களில் ரூ.183 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் தி ராஜாசாப். மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் கடந்த 9ம் தேதி வெளியானது. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர், ராஜா சாப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 1சதவீதம் பூர்த்தி செய்யத் தவறினாலும் கேள்வி கேட்கலாம் என்று சவால்விட்டிருந்தார். 

இந்நிலையில் பிரபாஸின் ராஜா சாப் படம் கடந்த 3 நாட்களில் ரூ.183 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT