சினிமா செய்திகள்

பாகிஸ்தான் நடிகையின் பிறந்தநாளுக்கு பிரபாஸ் அனுப்பிய பரிசு

பிரபாஸ் நடிக்கும் ‘பவுசி’ திரைப்படம் டிசம்பர் 3-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

பாகிஸ்தான் நடிகை இமான்விக்கு நடிகர் பிரபாஸ் அனுப்பிய உணவு பொருட்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் கலக்கி வந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படத்துக்கு பிறகு இந்தியளவில் பிரபலமானார். அதன் பின்னர் அவரை வைத்து எடுக்கும் படங்கள் பான் இந்தியா படங்களாகவே எடுக்கப்பட்டு வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்களில் மட்டும் நடிக்கும் ஹீரோவாக பிரபாஸ் மாறிவிட்டார். அதன் பிறகு ‘பாகுபலி 2’‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதி புருஷ்’, ‘சலார்’, ‘கல்கி’, ‘தி ராஜா சாப்’ படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ‘கல்கி 2’, ‘ஸ்பிரிட்’, ‘பவுசி’ படங்களில் நடித்து வருகிறார்.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ்

பிரபாஸ் தற்போது ‘சீதா ராமம்’ படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘பவுசி’ படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இந்த படம் தயாராகிறது. இதில் இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி - சிரீஸ் சார்பில் நவீன் எர்னேனி,ரவி சங்கர், பூஷன்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதை

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘பவுசி’ திரைப்படம் அதிரடி ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. பிரபாஸின் மாறுபட்ட தோற்றமும், ஹனு ராகவபுடியின் உணர்வுப்பூர்வமான திரைக்கதையும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

‘பவுசி’ திரைப்படம் டிசம்பர் 3-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இமான்வியின் பிறந்தநாளில் பிரபாஸ் அனுப்பிய பரிசு

‘பவுசி’ படத்தில் நடிகை இமான்வி ஹீரோயினாக நடித்த வருகிறார். அவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை இமான்வியின் பிறந்தநாளில் பிரபாஸ் ஏராளமான உணவை அனுப்பி வைத்திருக்கிறார். அதை புகைப்படம் எடுத்து நடிகை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். ‘இதயமும் வயிறும் நிரம்பி விட்டது’ என அவர் பிரபாஸுக்கு நன்றி கூறி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT