சினிமா செய்திகள்

பிரபுதேவா, சிம்ரன் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் ஜியோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தை தயாரிக்கிறது.

பிரபுதேவா மற்றும் சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது

ரஜினி நடித்த படையப்பா, பாபா, சிவாஜி உள்ளிட்ட படங்களில் கிராபிக் டிசைனராக பணியாற்றிய சவுந்தர்யா ரஜினிகாந்த் கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ரஜினியின் கோச்சடையான், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படங்களை அவர் இயக்கியிருந்தார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பிரபுதேவா - சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் நிறைந்த திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மிதுன் ஜெய்சங்கர், ஸ்மீகா மணிமேகலை ஆகியோரும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் ஜியோன் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படக்குழு இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் 90-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளான பிரபுதேவா, சிம்ரன் இதற்கு முன்பு வி.ஐ.பி மற்றும் டைம் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT