மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது: பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா?
மிரட்டலான கிராபிக்ஸ் மற்றும் அதிக செலவில் பொன்னியின் செல்வன் தயாராகிறது. இந்த திரைப்படம் பாகுபலியை மிஞ்சுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் 12-ந்தேதி தாய்லாந்தில் தொடங்குகிறது. இதில் நடிக்க 14 முன்னணி நடிகர்கள் தேர்வாகி உள்ளனர்.