சினிமா செய்திகள்

இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைக்கும் பிரதமர் மோடி

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 2024ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை அக்டோபர் 11ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார்.

சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை வரவுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் சென்னை பயணத்தின் பயணத் திட்டம் வெளியாகியுள்ளது.

தில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லிக்கு காலை 11.30 மணியளவில் செல்கிறார்.

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கிவைத்து, மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு வருகிறார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அந்த வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

இறுதியாக ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பின்னர், சென்னை பயணத்தை முடித்துவிட்டு டில்லி புறப்படுகிறார்.

இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 2024ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

SCROLL FOR NEXT