பிரியங்கா மோகன் 
சினிமா செய்திகள்

எனது இன்னொரு முகத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள் - பிரியங்கா மோகன்

வெற்றிமாறன் படங்களில் நடிக்கவேண்டும் என்பது என் முக்கிய ஆசை என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

‘டாக்டர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தொடர்ந்து 'கேப்டன் மில்லர்', 'எதற்கும் துணிந்தவன்', 'பிரதர்', 'மேட் இன் கொரியா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தறபோது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மஞ்சனத்தி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'அரசன்' படத்தில் நடிப்பது குறித்து பிரியங்கா மோகன் கூறும்போது, "வெற்றிமாறன் படங்களில் நடிக்கவேண்டும் என்பது என் முக்கிய ஆசை. 'வடசென்னை' படத்தின் மிகப்பெரிய ரசிகை நான். இந்த ஆசை ‘அரசன்' படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது.

'அரசன்' திரைப்படம், 'வடசென்னை' படத்தின் அதே கதையுலகில், அதற்கு இணையாக நடைபெறும் கதையாக உருவாகிறது. நான் பெங்களூருவை சேர்ந்தவள் என்பதால் ஆரம்பத்தில் வடசென்னை வட்டார மொழி பேசுவதில் நிறைய கஷ்டங்கள் இருந்தன. இருந்தாலும் விரைவாக அந்த மொழியை பழகிக் கொண்டேன். எனது இன்னொரு முகத்தை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள்" என்றார்.

SCROLL FOR NEXT