சினிமா செய்திகள்

பிரியங்கா மோகனின் “மேட் இன் கொரியா” பட டிரெய்லர் வெளியானது

பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் மொழியில் இன்று கொடி கட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனை தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்', 'கேப்டன் மில்லர்', 'பிரதர்' உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடத்திலும் தற்போது பிசியா நடித்து வருகிறார்.

இவர் தற்போது இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படம் மேட் இன் கொரியா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முழுவதும் பீல் குட் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.