சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் கே.ராஜனின் முடிவு எதிர்பாராதது மற்றும் நம்ப முடியாதது - வைரமுத்து

துணிச்சல் வெளிப்படைத் தன்மை உள்ள ஒருமனிதன் எப்படி இப்படி முடிவெடுத்தான்? என வைரமுத்து கேள்வியெழுப்பி உள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தயாரிப்பாளர் கே.ராஜனின் முடிவு எதிர்பாராதது மற்றும் நம்ப முடியாதது. துணிச்சல் வெளிப்படைத் தன்மை அறச்சீற்றம் உள்ள ஒருமனிதன் எப்படி இப்படி முடிவெடுத்தான்?. மொத்தம் மரணம் மூன்று வகை:

“இயல்புச் சாவு என்பது மனிதன்மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு.

கொலை என்பது மனிதன்மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

தற்கொலை என்பது மனிதன் சமூகத்தின்மீது காட்டும் எதிர்ப்பு”

இந்தத் தற்கொலை சமூகத்தில் எதை எதிர்த்துவிட்டுப் போயிருக்கிறது என்பது கண்டறியப்பட வேண்டும் . தற்கொலைகளுக்கு நான் மலர்மாலை வைப்பதில்லை ஆனால், இரங்காமல் இருப்பதுமில்லை. ராஜன் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.