சினிமா செய்திகள்

“கேரளா ஸ்டோரி 2” படத்​துக்கு எதி​ராக போராட்​டம் - காட்​சிகள் ரத்து

‘கேரளா ஸ்டோரி 2’ படத்தில் இந்து பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்

‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த 2023ம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தது. இது வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் வசூல்ரீதியாக வெற்றிப்பெற்றது.

இதன் முதல்பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ‘கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது. டிரெய்லரில் இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டில் படத்தின் தணிக்கை சான்றிதழ் ரத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த கேரள ஐகோர்ட் நீதிப​தி, “2 வாரங்களுக்கு படத்தை திரை​யிட இடைக்​காலத் தடை விதிக்கப்படு​கிறது. மேலும் சமூக நல்​லிணக்​கத்தை சீர்குலைக்காமல் இருப்​பதை உறுதி செய்​வதற்​கான வழிகாட்டுதல்​களை மத்​திய திரைப்பட சான்றிதழ் வாரி​யம் பின்பற்​ற​வில்​லை” என்​றும் தெரி​வித்​தார்.

தனி ​நீ​திப​தி​யின் இந்த உத்​தர​வுக்கு எதி​ராக, தயாரிப்​பாளர் விபுல் ஷா தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை, உயர்​ நீ​தி​மன்ற நீதிப​தி​கள் சுஸ்​ருத் அரவிந்த் தர்​மா​தி​காரி மற்​றும் பி.​வி.​பால​கிருஷ்ணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசாரித்து தனி நீதிபதி விதித்த தடையை நீக்கியது. இதையடுத்து இப்​படம் வெளி​யானது.

கேரளா​வில், 38 திரையரங்​கு​களில் மட்​டுமே இப்​படம் திரையிடப்பட்​டுள்​ளது. தெற்கு கேரளா​வில் 9 திரையரங்குகளிலும் எர்​ணாகுளம், திருச்​சூர், பாலக்​காடு மாவட்டங்​களில் 14 திரையரங்​கு​களி​லும், மலபாரில் 15 திரையரங்​கு​களி​லும் படம் திரை​யிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் மாநிலத்தை இழி​வுபடுத்​தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்​படத்​தைத் திரை​யிட அனு​ம​திக்​கக்கூ​டாது என்​றும், திரையிடலை ரத்து செய்ய வேண்​டும் என்​றும் இந்​திய ஜனநாயக வாலிபர் சங்​கம் கேரள மாநிலம் முழு​வதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்​டது. கண்​ணூர் மற்​றும் கொச்​சி​யில் உள்ள திரையரங்​கு​களில் போராட்டம் காரண​மாக நேற்று காலை காட்சி ஒத்திவைக்கப்பட்டது. பல திரையரங்​கு​களில் பார்​வை​யாளர்​கள் வராத​தால் காட்​சிகள் ரத்து செய்​யப்​பட்​டன.