மீனம்பாக்கம்,
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் விஜய்,அரசியலுக்குள் நுழைந்து முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்துள்ளார். 234 தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட்டுள்ளது. இந்த தேர்தலில் எந்த அளவிற்கு விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரிதும் பேசப்படும் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, நேற்று சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையம் வந்தார். அவரிடம் விஜய் அரசியல் வருகை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மம்முட்டி, "எதுவும் தெரியாது" என்றார். மேலும் அவரிடம், உடல் நலம் எப்படி இருக்கிறது? என கேட்டதற்கு "நன்றாக உள்ளது" என கூறிவிட்டு சென்றார்.