சென்னை,
2020-ம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு 'டிராகன்' படம் வெளியானது. இதில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 'எஸ்.டி.ஆர் 51' படத்தை இயக்க உள்ளார். இதில் நடிகை கயாடு லோஜர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அஸ்வத் மாரிமுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி கதை செல்லி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் கமல்ஹாசனுடனான கூட்டணியை அஸ்வத் மாரிமுத்து அமைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கும் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அஸ்வத் மாரிமுத்துவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.