சினிமா செய்திகள்

'காஞ்சனா-4' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் -காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனைதொடர்ந்து 'காஞ்சனா-4' படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தினையும் ராகவா லாரன்ஸ் எழுதி இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா படேஹி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராகவா லாரன்ஸ் ஒரு அதிரடியான போஸ்டரை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'காஞ்சனா' பட வரிசையில் இதுதான் கடைசி பாகம் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை ஓரிரு மாதங்களில் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கிறது.