சினிமா செய்திகள்

'சந்திரமுகி 2' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ராகவா லாரன்ஸ்..!

'சந்திரமுகி 2' படத்தின் டப்பிங் பணிகளை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார்.

சென்னை,

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'சந்திரமுகி 2' படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT