சினிமா செய்திகள்

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 15ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் எஸ்.எஸ்.எம்.பி 29 இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த மிகப்பெரிய படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் நவம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இப்படத்திற்கு ஜென்63 மற்றும் வாரணாசி ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 15-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

SCROLL FOR NEXT