சினிமா செய்திகள்

மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த்... ‘தர்மன்’ படத்தின் அடுத்தகட்ட பணிகள்!

'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை,

இந்த படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது, அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்' படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நவம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், நீண்ட நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பாக இது இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா, ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

வில்லனாக ராம் பொத்தினேனி?

இதற்கிடையில், பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக அவர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினி பிறந்தநாளில் புதிய அப்டேட்

‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டாக, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று இயக்குநர் தெரிவித்திருந்தார். அது ‘தர்மன்’ படத்தின் டீசர் அல்லது முக்கிய முன்னோட்டக் காட்சி வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு அப்டேட்

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது, அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்' படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நவம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், நீண்ட நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பாக இது இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் 2027ம் ஆண்டு தமிழப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT