சினிமா செய்திகள்

கிரீஸ் சுற்றுலாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 9-ம் தேதி ரஜினிகாந்த் கிரீஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கிரீஸ் நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில், தற்போது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

அனிருத்-காவ்யா திருமணம்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 9-ம் தேதி ரஜினிகாந்த் கிரீஸ் நாட்டுக்குச் சென்றார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தொடர்ந்து குடும்பத்தினருடன் அங்கு சுற்றுலாவிலும் ஈடுபட்டார்.

சென்னை திரும்பிய ரஜினி

இந்த நிலையில், சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரைக் கண்ட செய்தியாளர்கள் நலம் விசாரித்தனர். அப்போது அவர்களுக்கு புன்னகையுடன் தம்ஸ் அப் (Thumbs Up) காட்டியபடி ரஜினிகாந்த் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ரஜினிகாந்த் சென்னை திரும்பிய தகவல் மற்றும் விமான நிலையத்தில் அவர் தம்ஸ் அப் காட்டிய காட்சிகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

SCROLL FOR NEXT