சினிமா செய்திகள்

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கவுரவம்

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவாவில், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல்நவம்பர் 28ம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

முன்னதாக, இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படமும் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்