சினிமா செய்திகள்

ரஜினியின் “தர்மன்” படத்தின் புதிய அப்டேட்

அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை பற்றிய அடுத்த அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

மருத்துவராக ரஜினிகாந்த்

இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘தர்மன்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவடைந்ததாக புகைப்படங்களை வெளியிட்டு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து சமீபத்தில் அறிவித்திருந்தார்.

படத்தில் இணைந்த நயன்தாரா

ரஜினியின் “தர்மன்” படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு கிளிம்பிஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

படத்தில் இணையும் புதிய நடிகை

இந்நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு புரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.

நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT