‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.
சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.