தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், தமிழில் 'தடையறத் தாக்க', 'ஸ்பைடர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'என்.ஜி.கே.', 'அயலான்', 'இந்தியன்-2' படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ராமாயணா' படத்தில் சூர்ப்பனையாக நடித்து கலக்கியுள்ளார்.
இதற்கிடையில் காலநிலை மாற்றம் குறித்த தனது கவலையை நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “காலநிலை மாற்றம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாக உள்ளது.
சுற்றுச்சூழல் பற்றி நாம் தயவுசெய்து சிந்தித்து பார்க்க வேண்டும். இங்கு விவாதங்கள் மட்டுமே தீர்வாகி விடாது. பொறுப்புள்ள குடிமக்களாக நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த சிறிய மாற்றங்களையாவது நமது அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
அப்போது தான் எதிர்கால தலைமுறையினரும் வாழ தகுதியான பூமியை நாம் விட்டுச் செல்ல முடியும். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அதை கடைபிடித்து பூமியை காப்பாற்றுங்கள்" என்று கூறியுள்ளார்.