சினிமா செய்திகள்

ராம் சரணின் “பெடி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் ‘பெடி’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு ராம் சரண் பெடி படத்தில் நடித்து வருகிறார். உப்பெனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டரை பெடி படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் நடிகர் ராம் சரண்.

இந்த நிலையில், பெடி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT