சினிமா செய்திகள்

முதல் நாளில் ரூ. 155 கோடி வசூலித்த “ராமாயணா” - அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ராமாயணா’ படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 155 கோடி என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ படம் நேற்று வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ‘ராமாயணா’ படம் உருவாகியுள்ளது.

முதல் நாள் வசூல்

இந்நிலையில், ‘ராமாயணா’ படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி ரூபாய்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ராமாயணா’ படம் முதல்நாளில் ரூ. 155 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்கான விமர்சனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறை வர உள்ள நிலையில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT