‘ராமாயணா’ படம், 19 நாட்களில் இந்தியாவில் ரூ.1,141.65 கோடியும், வெளிநாடுகளில் ரூ.563 கோடியும் என மொத்தம் ரூ. ரூ.1,704.65 கோடியை வசூலித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 5-ம் தேதி ‘ராமாயணா’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ராமாயணா’ படம், 19 நாட்களில் இந்தியாவில் ரூ.1,141.65 கோடியும், வெளிநாடுகளில் ரூ.563 கோடியும் என மொத்தம் ரூ. ரூ.1,704.65 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் நடிகர் யாஷின் முந்தைய படமான 'கே.ஜி.எப்: சாப்டர் 2' படத்தின் வசூல் சாதனையை ‘ராமாயணா’ முறியடித்துள்ளது.
திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 'ராமாயணா' படத்தின் வசூல் மேலும் புதிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு, இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை 'ஜியோஹாட்ஸ்டார்' தளம் கைப்பற்றியுள்ளது. இப்படம் டிசம்பர் இறுதிக்குள் அல்லது 2027 ஜனவரி மாதத்தில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘ராமாயணா: பாகம் 2’ திரைப்படம் வரும் 2028-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்குத் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.