சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதியை வாழ்த்தி வரவேற்ற “ரணபலி” படக்குழு

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.

ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி' பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர்.இதில் 'மம்மி' பட நடிகர் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ரணபாலி’ திரைப்படத்தின் “ஏதய்யா சாமி" பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு ‘ரணபலி’படப்பிடிப்பில் இணைந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தம்பதியை கேட் வெட்டி, பூங்கொத்து கொடுத்து படக்குழு வாழ்த்தி வரவேற்றது. இப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது.