‘ராமாயணா’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்திற்கான டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
சோனி பிக்சர்ஸ் இந்தப் படத்தின் முதல் பாகத்தை உலகம் முழுவதும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி பல மொழிகளில் சர்வதேச அளவில் வெளியிட இருக்கிறது.
ரன்பீர் கபூர், யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் உலகளவில் ரூ.25 கோடியைத் தாண்டியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘ராமாயணா’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ‘ராமாயணா’ படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். இதில் ராவணனின் தோற்றம், அவனது மனப் போராட்டம், மற்றும் அவனது பின்னணிக் கதையை ஆழமாக விவரிப்பதற்காக முதல் பாகத்திலேயே 65 நிமிடங்கள் வரை அவருக்குக் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராவணன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடிகர் யாஷ் 55 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துள்ளார்.