சினிமா செய்திகள்

2வது குழந்தையின் பெயரை அறிவித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் 19ம் தேதி 2வதாக பெண் குழந்தை பிறந்தது.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி தங்களுக்குப் பிறந்துள்ள இரண்டாவது பெண் குழந்தைக்கு ‘தேவி படுகோன் சிங்’ என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் கடந்த 2018-ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதி கடந்த 2024-ம் செப்டம்பரில் தங்களின் மகள் துவா பிறந்ததை ஒன்றாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 19ம் தேதி 2வதாக பெண் குழந்தை பிறந்தது.

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களுக்குப் பிறந்துள்ள இரண்டாவது பெண் குழந்தைக்கு ‘தேவி படுகோன் சிங்’ என்று பெயரிட்டுள்ளனர். விஜயதசமி திருநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்ட குடும்பப் புகைப்படத்துடன் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளனர். பிரபலங்களின் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியைத் தம்பதியினர் பகிர்ந்து இருந்தனர்.

குழந்தையின் பெயரை அறிவித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்

இந்நிலையில், குழந்தைக்குப் பெயரிட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக முதல்முறையாக ஒரு குடும்பப் புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் படத்தில் தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் பாரம்பரிய உடைகளில் குழந்தையைக் கையில் ஏந்தியிருக்க, அவர்களின் மூத்த மகளான துவா தனது குட்டித் தங்கை தேவிக்கு அன்போடு . "Of Love & Abundance... Devi Padukone Singh" என்ற அழகான வாசகத்துடன் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

ஏற்கனவே இவர்களுக்கு கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி ‘துவா’ என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவது மகளாக ‘தேவி படுகோன் சிங்’ வந்துள்ளதால் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளிவந்த இந்தத் தகவலைத் தொடர்ந்து மிருணாள் தாகூர், பூமி பெட்னேகர் உள்ளிட்ட பல முன்னணி பாலிவுட் திரைப்பிரபலங்கள் தங்களது அன்பை பதிவிட்டு வாழ்த்துகளை மழையாகப் பொழிந்து வருகின்றனர்.

நடிக்கும் படங்கள்

அட்லி – அல்லு கூட்டணியின் ‘ராக்கா’ படத்தில் நடித்து முடித்துள்ள தீபிகா படுகோன், சித்தார்த் ஆனந்தின் இயக்கத்தில் ஷாருக்கான் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘கிங்’ படத்தில் நடிக்க உள்ளார்.

ஆதித்ய தாரின் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தில் நடித்திருந்த ரன்வீர், அடுத்து கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து ‘ப்ரளய்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

SCROLL FOR NEXT