சினிமா செய்திகள்

திரையில் 50 நாட்களை கடந்த ரன்வீர் சிங்கின் “துரந்தர் 2”

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்த ‘துரந்தர் 2’ படம் ரூ.1,800கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தன.

அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், 3 மணி 49 நிமிடங்கள் நீளமுடையதாகும். வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதுவரை ரூ.1,800கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘துரந்தர் 2’ படம் வருகிற 14ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ‘துரந்தர் 2’ படம் திரையில் 50 நாட்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.