ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் 'துரந்தர். பாகிஸ்தானுக்கு சென்று உளவாளியாக செயல்படும் கதைக்களத்தில் உருவான இந்த படம் வசூலில் வாரி குவித்தது. அதாவது, உலக அளவில் சுமார் 1400 கோடி வசூலித்தது. அதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியாகி 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த இரண்டு பாகமும் வசூலை வாரி குவித்த நிலையில், இந்த படத்தின் முதல் பாகத்தை ஜப்பானில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. வரும் ஜூலை 10ம் தேதி இப்படம் அங்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ஜப்பான் மொழியில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே சில இந்தியத் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகி நல்ல வசூலைக் கொடுத்துள்ள நிலையில், துரந்தருக்கும் மெகா ஓபனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.