சினிமா செய்திகள்

2 நாட்களில் ரூ.53 கோடி வசூலித்த ராஷ்மிகா மந்தனாவின் “காக்டெயில் 2”

ஹோமி அடஜானியா இயக்கத்தில் ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் நடித்த ‘காக்டெயில் 2’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

காக்டெயில்’ முதல் பாகம் 2012ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. முதல் பாகத்தில் சைப் அலிகான், தீபிகா படுகோன் நடித்திருந்தார்கள். ஹோமி அடஜானியா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காக்டெயில் 2’ படத்தில் ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை மேடாக் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

‘காக்டெயில் 2’ படத்தின் கதை

மூவருக்குள்ளான காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. ராஷ்மிகாவுடன் ஷாகித் காதலில் இருக்க, அவரிடம் கீர்த்தி சனோன் காதலிப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் மூவரும் இணைந்து உறவு கொள்வது தொடர்பாக பேசும் காட்சிகள் இணையத்தில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இப்படம் கடந்த ஜூன் 19ஆம் தேதி வெளியானது.

பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியாகியுள்ள ‘காக்டெயில் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிக வலுவான வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், வார இறுதி நாளான நேற்று திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதால் படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ‘காக்டெயில் 2’ படம் 2 நாட்களில் ரூ.53 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.