சினிமா செய்திகள்

மேடையில் கெட்ட வார்த்தை பேசிய ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ

‘காக்டெய்ல் 2’ பட விழாவில் ராஷ்மிகா மந்தனா மற்றும் கிருத்தி சனோன் கலந்து கொண்டனர்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கிருத்தி சனோனும், தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்துள்ள ‘காக்டெய்ல் 2’ திரைப்படம் வரும் ஜூன் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஹோமி அடஜானியா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மும்பையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா மந்தனா மற்றும் கிருத்தி சனோன் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் திரைப்படம் குறித்தும், சக நடிகை கிருத்தி சனோன் பற்றியும் ராஷ்மிகா பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு கெட்ட வார்த்தையை உச்சரித்தார். அதை கூறிய உடனேயே, பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் என்ன பேசிவிட்டேன் என்பதை உணர்ந்த ராஷ்மிகா சற்றே சங்கடமடைந்தார்.

அந்த தருணத்தை நகைச்சுவையாக மாற்ற முயன்ற அவர், “மன்னிக்கவும்... தயவுசெய்து அதை (சென்சார்) நீக்கிவிடுங்கள்” என்று சிரித்தபடி கூறினார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் சிரிப்பை ஏற்படுத்தியதுடன், அதுகுறித்த வீடியோயும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.