சினிமா செய்திகள்

ராஷ்மிகாவின் “மைசா” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா நடித்த ‘மைசா’ படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

செல்வணி செல்வராஜ் இயக்கத்தில் ராஷ்மிகா நடித்துள்ள ‘மைசா’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘மைசா’ படத்தில் ராஷ்மிகா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது இயக்குனர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான ‘மைசா’ படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

ஆக்‌ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ராஷ்மிகா இதுவரை நடித்திராத வகையில் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீருக்கடியில் சண்டைக்காட்சி

‘மைசா’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக ராஷ்மிகா இடம்பெறும் நீருக்கடியில் சண்டைக்காட்சி அமைந்துள்ளது. இந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் நீருக்கடியில் சண்டைக்காட்சிகளில் ஒன்றாக இதனை படக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த காட்சிகளை படமாக்கியபோது ராஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் டீசர் வெளியீடு

ராஷ்மிகாவின் ‘மைசா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ராஷ்மிகாவின் புதிய ஆக்ரோஷமான தோற்றமும், வித்தியாசமான கதாபாத்திரமும் ‘மைசா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முதல் பாடல் வெளியானது

‘மைசா’ படத்தின் முதல் பாடலான ‘ஓ மைசா ரே’ பாடல் தெலுங்கில் வெளியானது. தமிழில் ‘ரத்தவெறி கொண்டிருக்க..’ என விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதிய இப்பாடலை குமரா வக்தேவி பாடியுள்ளார்.

படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

இப்படம் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பான் இந்திய மொழிகளில் வெளியாக இருந்த நிலையில், அத்தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

உயர்ந்த தொழில்நுட்பத் தரத்துடன் கூடிய சிறந்த பெரிய திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவும், தொழில்நுட்பக் காரணங்களுக்காகவும் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான அன்பார்முலா பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT