சினிமா செய்திகள்

ரத்ன குமாரின் “29” படத்தின் “பொல்லாத ஆசைகள்” பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரத்ன குமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ‘29’ படம் மே 8ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை,

2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

தற்போது, கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் '29' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிக்கும் ‘29’ படத்தின் ‘பொல்லாத ஆசைகள்’ பாடல் வரும் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் மே 8ம் தேதி வெளியாகிறது.