சினிமா செய்திகள்

“கராத்தே பாபு” படத்தின் டப்பிங் பணியில் ரவிமோகன்

நடிகர் ரவி மோகன் கணேஷ் பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாக உள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ரவி மோகன் கராத்தே பாபு படம் என் கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றார். இத்திரைப்படத்தில் இயக்குனர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் டப்பிங் பணியை ரவி மோகன் துவங்கியுள்ளதாக, படக்குழுவினர் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.