சினிமா செய்திகள்

ரவி தேஜாவின் 78வது படத்தின் டைட்டில் வெளியீடு

ரவி தேஜா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘துலாபாரம்’ எனப் பெயரிட்டுள்ளது.

மாஸ் மகாராஜா

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

அடடா சுந்தரா, சரிபோத சனிவாரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா அடுத்ததாக நடிகர் ரவி தேஜாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார். அனஸ்வரா ராஜன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்குத் ‘துலாபாரம்’ எனப் பெயரிட்டுள்ளது. இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு பூஜை

‘துலாபாரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதாலும் ரவி தேஜாவின் கடைசி படம் ‘இருமுடி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாலும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT