கே ஸ்குயர் சினிமாஸ் சார்பில் கே.பிந்துமாதவி தயாரித்து பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் 'பிக்பாஸ்' முகேன் ராவ் மற்றும் பிரீத்தி அஸ்ரானி ஆகியோர் 'நிறம்' என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் தான்யா ஹோப், நிதின் சத்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முகேன் ராவிடம், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான நீங்கள் படங்கள் நடிக்க இடைவெளி எடுப்பது ஏன்? சினிமா உங்களை ஏமாற்றுகிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு முகேன் ராவ் பதிலளிக்கையில், "அப்படி எல்லாம் இல்லை. பாடல் உள்ளிட்ட பணிகள் வழக்கம்போல செல்கிறது. சமூக வலைதளங்களின் தாக்கம் இப்போது மிகுதியாக இருக்கிறது. 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இப்போது ரசிகர்களின் தேடல் வேறுமாதிரியாக போயுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் தான் படங்கள் நடிக்க இடைவெளி ஏற்பட்டுள்ளது. நல்ல கதைகளுடன் விரைவில் வருவேன். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லவில்லை. நல்ல கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், வில்லனாக இருந்தாலும் நடிக்க நான் தயார்", என்றார்.