சினிமா செய்திகள்

தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் ‘மேன் ஆப் தி மேட்ச்’ விஜய்தான்: சின்னத்திரை நடிகர் தினேஷ்

கான்பிடன்டா இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று சின்னத்திரை நடிகர் தினேஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின. இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர். இருப்பினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது.

இந்தநிலையில் 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும்.

இதற்கிடையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக சின்னத்திரை நடிகர் தினேஷ் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தினேஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பதிவில், “தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் ‘மேன் ஆப் தி மேட்ச்’ (Man of the Match) விஜய் அண்ணாதான். சிறுவயதில் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்ததுபோல், இந்த தேர்தல் முடிவையும் மக்கள் உணர்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், விசில் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பிறகும் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. தமிழக வரலாற்றில் பெரிய தாக்கத்தை உருவாக்கப் போகிறோம். அதனால் கான்பிடன்டா இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்..” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.