சினிமா செய்திகள்

அனுபமா நடித்த ‘கிரேஸி கல்யாணம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தற்போது படத்தின் வெளியீடு இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

‘கிரேஸி கல்யாணம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீடு இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பரிட்சயமான நடிகை அனுபமா

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் முதல் படத்திலேயே நன்கு பரிட்சயமான அனுபமா, தமிழில் கொடி, டிராகன் மற்றும் பைசன் காளமாடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

‘கிரேஸி கல்யாணம்’

தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘கிரேஸி கல்யாணம்’. குடும்பப் பின்னணியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இப்படத்தில் விகே நரேஷ், தருண் பாஸ்கர், அகில் ராஜ் உட்டேமாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பத்ரப்பா காஜுலா இயக்கியுள்ள இப்படத்தை ஆரோ சினிமாஸ் சார்பில் பூசம் ஜெகன் மோகன் ரெட்டி தயாரித்துள்ளார். சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ளார்.

திருமணத்தை மையமாகக் கொண்ட கதை

திருமணத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ‘கீர்த்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகளுக்கு பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைக்க தந்தை முயற்சிக்க, தனது விருப்பத்தை நிறைவேற்ற கீர்த்தி முயற்சிப்பதால் ஏற்படும் குடும்பச் சூழல்கள் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் படக்குழு விளம்பரப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட வெளியீடு

இதற்கிடையில், ‘கிரேஸி கல்யாணம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீடு இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT